செல்லாயிபுரம். காளைக்கும் மனிதனுக்கும் இடையில் ஆக்ரோஷமான போட்டி அரங்கேறும் களம். அந்த ஊர் ஜமீன்தாரின் காளையான காரியை இதுவரை யாரும் அடக்கியதில்லை. காரி என்றாலே ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலே அதிரும். அந்தக் காளையை எதிர்கொள்ள வந்தவன்தான் பிச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் தகப்பன் தொடங்கி முடிக்காமல்போன காரியத்தை முடித்துவைக்க வந்திருக்கிறான். அவனால் அதை அடக்கியாள முடிந்ததா? காரியின் புகழ் என்ன ஆயிற்று? ஜமீன்தாரின் கர்வம் என்ன ஆயிற்று? நவீன தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் படைப்புகளில் ஒன்றான சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் அற்புதமான முறையில் கிராஃபிக் நாவலாக உருப்பெற்றிருக்கிறது. ஓவியங்களை உருவாக்கி நூலை வடிவமைத்த அப்புபன், நாவலைத் தழுவி கிராஃபிக் பிரதியை எழுதிய பெருமாள்முருகன் ஆகியோரின் கைவண்ணத்தில் வாடிவாசல் காட்சி வடிவில் மிளிர்கிறது.
No product review yet. Be the first to review this product.