“அஞ்சு வருசம் தொடர்ந்து ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்க முடியுது, வீட்டு ஓனரு விட்டிருக்கறாருன்னாலே ஆச்சரியம். பத்து வருசம் இருந்தா அதிசயம். பதனஞ்சு வருசம் இருந்தா சாதனை. இருவத்தொம்பது வருசம் இருந்தது கின்னஸ் சாதனைதான்!” என்று நாவலில் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. பொள்ளாச்சி நகரத்தில், ஒரு காலனியில் உள்ள வள்ளிநாயகம் காம்பௌண்டில் இந்த ஆச்சரியம், அதிசயம், சாதனை யாவும் நடக்கின்றன. அது மட்டுமல்ல. அந்தக் காம்பௌண்டில் வசிக்கும் எட்டு குடித்தனக்காரர்கள் வேறுபட்ட ஜாதி, மதம், இனம்; ஏழைகள், நடுத்தர வர்க்கம்; பல வகை குணங்கள் ஆகிய பேதங்களுக்கிடையிலும் ஒட்டுறவாக பெரிய கூட்டுக் கூடும்பம் போல வாழ்ந்து வருகின்றனர். மகிழ்ச்சி, வேடிக்கை, கொண்டாட்டம், குதூகலம், நேச பாசம் என வாடகை சொர்க்கமாகத் திகழ்ந்த அந்தக் காம்பௌண்டை கொரொனா சூழல் எப்படியெல்லாம் பாதிக்கிறது, பிறகு என்ன ஆகிறது என்பதுதான் இந்த ஆவணப் புனைவின் மையம்.
No product review yet. Be the first to review this product.