வசுந்தராவிடம் கதைகளுக்குப் பஞ்சமில்லை. கார்ப்பரேட் உலகில் அவரது அனுபவம் ஏற ஏற அவரிடம் சொல்வதற்குக் கதைகள் ஏராளமாக உள்ளன. இந்தக் கதைகள் மூலமாகத் தனது அனுபவத்தை கார்ப்பரேட் உலகின் நடைமுறைக் கதைகளாக மாற்றுகிறார் வசுந்தரா.
முதல் பாகத்தில் வந்த வசுந்தராவின் கதைகளுக்கும் இந்தக் கதைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கார்ப்பரேட் உலகில் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டிகள், பணியாளர்களுக்கு இடையேயான நட்பு, பணிச்சுமை எனப் பெரும்பாலானோர் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகள் இந்தப் புத்தகத்தில் கதைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கதைகளில் நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பார்க்கலாம். இனி வரப்போகும் பிரச்சினைகளுக்கான முடிவுகளை இதில் நீங்கள் கண்டடையலாம். இதன்மூலம் இவை வெறும் கதைகள் என்ற கட்டமைப்பில் இருந்து விலகி, கார்ப்பரேட் உலகை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் களங்களாக மாறுகின்றன.
முதல் பாகத்தைப் போலவே ஜெயராமன் ரகுநாதன் எளிமையான, நகைச்சுவையான மொழிநடையில் இந்தக் கதைகளைப் படைத்துள்ளார். இந்தப் புத்தகம் ஒரு புதிய அனுபவத்தைத் தரப்போவது உறுதி.
No product review yet. Be the first to review this product.