நம்பிக்கையளிக்கின்ற எழுத்தை முன்வைத்துவரும் அ.கரீமின் சமீபத்தைய சிறுகதைகள், நம்மிடத்தே சலனங்களை எழுப்பியவண்ணம் உள்ளது. அரசின் அநீதியை அதிகாரத்தைச் சாடும் நிலையில், வாசகனிடம் ஆவேசத்தை உண்டாக்குகின்றன. அதிகார வெறி மற்றும் சகிப்புத்தன்மையின்றி அபத்த நிலையை எட்டுகையில், பரிகசிப்பை உருவாக்குகினறன. கொரோனா ஊரடங்கால், புலம்பெயரும் கூலிதொழிலாளர் வாழ்வின் சிதைவை சித்தரிக்கையில், பெரும் அவலத்தைப் பதிவாக்குகின்றன. இஸ்லாமிய சமூகத்தில் வகாபிய அடிப்படைவாதக் குரல் உரத்து மேலோங்குகையில், அதனை விமர்சனத்திற்குள்ளாக்குகின்றன. கொரோனா/ ஊரடங்கு சார்ந்து கதைகளும் அதிகாரத்தை விமர்சனத்திற்குள்ளாகும் கதைகளும் அ.கரீமுக்கே உரித்தானவை. சமூகத்தின் மீது அக்கறையும் பொறுப்பும் உள்ள எழுத்தாளன் என்ன எழுதவேண்டுமோ அதனை கரீம் எழுதுகிறார். ஆற்றல் மிக்க எழுத்தாளரைப்போல் அவர் தன் எழுத்தை வளமிக்கதாக செழுமை கொண்டதாக மாற்றுகிறார். சா. தேவதாஸ்
No product review yet. Be the first to review this product.