துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான பணமின்மையும் அலைக்கழிக்க, போதமின்றித் தெருக்களில் திரியும் தனியனான ஒருவனின் இரண்டுநாள் கதையே இந்தக் குறுநாவல்.
அவற்றின் போக்கில் இழுத்துப் போகப்பட சம்பவங்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்த அவனை ஆன்மீக வெளிப்பாடுகள் சில தொட்டுச் செல்கின்றன. இறுதிவரை வீடுதிரும்பாத அவன், அலைக்கழித்தவை மறைய, மாயச் சூழல் தோற்றுவிக்கும் விடுதலையைக் கண்ணுறுகிறான்.
பின்நவீனத்துவக் கதையாடலின் அனைத்துச் சாத்தியங்களும் தொழிற்படும் களம் இப்புனைவு.
No product review yet. Be the first to review this product.