அமெரிக்கா என்றதும் மனதில் தோன்றுவது அது வளமிக்க நாடு் ,இராணுவ பலமிக்க நாடு் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் நாடு என்பதே. ஆனால் உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே. நாகேஸ்வரியின் இந்நூல் இன்றைய அமெரிக்கா எவ்வாறு உருவானது. அதன் அரசியல் சமூகப் பொருளாதாரப் பின்னணி எப்படி இவ்வளவு வளத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்த முடிந்திருக்கிறது ஐரோப்பியக் குடியேறிகள் எப்படி பூர்வீகக் குடிகளை அழித்துக் காலணிகளை அமைத்தனர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பரிக்கக் கறுப்பர்கள் எந்த அளவிற்கு அந்நாட்டிற்கு வளத்தைச் சேர்த்தனர் போன்ற விஷயங்களில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறது. மேலும் உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாட்டில் சர்வாதிகாரம் என இரட்டை மனநிலையுடன் இயங்கும் அமெரிக்கா கியூபா, ஈரான் இராக் போன்ற நாடுகளுடன் நடந்துகொண்ட விதம் பற்றியும் சந்தைப் பொருளாதாரத்தால் கார்பரேட் நிறுவனங்கள் மக்களை கடன் அட்டை மூலம் நுகர்வோராகவும் அதீத மருத்துவச் செலவால் கடனாளியாகவும் ஆக்கியிருப்பது பற்றியும் இவை எவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது
No product review yet. Be the first to review this product.