பாட்டுக்கோட்டை என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்புகளால் முறுக்கேற்றின. மூடப்பழக்க வழக்கங்களைச் சாடுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சி,பகுத்தறிவுக் கொள்கைகளைத் திரைப்படப் பாடல்கள் மூலம் பாமரர்கள் மத்தியிலும் பரப்புவதற்கு அவர் பாடுபட்ட பான்மை -ஆகியவற்றை இப்போது எண்ணிப் பார்த்தாலும் எனது இதயம் கசிகிறது.
No product review yet. Be the first to review this product.