கடப்பது என்பதை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியை அடையும் புறச்செயல் என்னும் தளத்தைத்தாண்டி, எதார்த்தத்தின் அலுப்பைக் கடப்பது, காமத்தின் அழுத்தத்தைக் கடப்பது, கனவில் நீளும் பாதைகளைக் கடப்பது, சாதி உணர்வைக் கடப்பது, அச்சத்தைக் கடப்பது எனப் பல தளங்களிலும் நிகழும் நுட்பக்கூறுகளை இக்கதைகள் பதிவு செய்கின்றன. அறியாமையின் மூர்க்கத்தையும் தெளிவின்மையில் புதைந்திருக்கும் குழப்பத்தையும் கடக்கமுடியாத சுமையாக வாழ்க்கை மாற்றுகிறபோதும் அகம் உலர மறுக்கும் மனிதர்கள் இக்கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். மேகங்களிலிருந்து பொழியும் நீர் தாரைகள் என வாழ்வின் மீதான தீவிர விருப்பமும் இயல்புத்தன்மையும் அக்கறையும் வேட்கையும் இக்கதைகளுக்குள் ததும்பிக்கொண்டிருக்கின்றன. -ராஜகோபால்.
No product review yet. Be the first to review this product.