Caste : THE ORIGINS OF OUR DISCONTENTS - Isabel Wilkerson நூலின் தமிழாக்கம்
கவித்துவமாக எழுதப்பட்டு, அற்புதமாக ஆய்வு செய்யப்பட்ட சாதி நூல், இனம், வர்க்கம், பாலினம் என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அமெரிக்கப் படிநிலையின் உள்ளுணர்வுகளைக் கண்டறிய நம்மை அழைக்கிறது.
ஒத்துணர்வு மற்றும் நுண்ணறிவில் ஆழ்ந்துள்ள நூலான சாதி, அடுக்கடுக்கான பகுப்பாய்வு மற்றும் உண்மையான மனிதர்களின் கதைகள் மூலம், மனிதத் தரநிலையின் பேசப்படாத கட்டமைப்பை ஆராய்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நம்மை எது பிளவுபடுத்தியதோ அதனால் நமது வாழ்க்கை எவ்வாறு இன்னும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
“நவீன கால சாதி நடைமுறைகள் பெரும்பாலும் வெளிப்படையான தாக்குதல்கள் அல்லது உணர்வுநிலை விரோதமாக இருப்பது குறைவு. அவை காற்றைப் போன்றது. உங்களை வீழ்த்தும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவை. ஆனால் அவை தனது வேலையைச் செய்யும்போது கண்ணுக்குத் தெரியாதவை” என்று வில்கெர்சன் எழுதுகிறார்.
தெய்வ விருப்பம், பரம்பரை, மனிதாபிமானமின்மை உள்ளிட்டவை, நாகரிகங்கள் அனைத்திலும் சாதி அமைப்புகளுக்கு அடிப்படையாக இருக்கும் எட்டு தூண்கள் என்று வில்கெர்சன் உறுதியாக வரையறுக்கிறார். இந்தியா, நாஜி ஜெர்மனி ஆகிய, வரலாற்றின் மற்ற இரண்டு படிநிலைகளை இணைத்து அவர் ஆவணப்படுத்துகிறார். செயற்கையான பிரிவினைகளால் சிதைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் நாம் அனைவரும் கொடுக்கும் விலையைப் பற்றி மாபெரும் புரிதல் இல்லாமல் எந்த வாசகரும் விடுபடமாட்டார்.
“சாதிப் படிநிலை என்பது உணர்வுகள் அல்லது ஒழுக்கம் பற்றியது அல்ல. இது அதிகாரம் பற்றியது - எந்தக் குழுக்களிடம் அது உள்ளது, எவற்றிடம் அது இல்லை என்பது பற்றியது” என்று வில்கெர்சன் எழுதுகிறார்.
No product review yet. Be the first to review this product.