ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் “சுதந்திர தாகம்” நாவலின் கதை. போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, தேசபக்தி உணர்வு தலைதூக்கும்போது, இவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற கதை அன்றைய வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது.
இந்திய சுந்தந்திரப் போராட்டத்தின் முக்கிய காலகட்டமான 1900 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர இந்தியா வரையான காலகட்டத்தை புனைவெழுத்தில் சொல்லும் முதல் நாவல்.
எழுத்து பத்திரிக்கைமூலம் தமிழ் நவீன கவிதைக்கு ஒரு புது பானியை உருவாக்கிக் கொடுத்த சி.சு.செல்லப்பா, உயிருடன் இருக்கும் காலத்தில் வெளியிட்ட கடைசிநாவல் சுதந்திர போராட்ட காலகட்ட இருந்த மதுரையின் முழுமையான வரலாற்று ஆவணம்.
No product review yet. Be the first to review this product.