சுயவரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்கு பொருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணமாகும். இயல்பிலேயே அவர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பார்வையைப் பெற்றிருப்பதால் சுயமையின்மை சுலபமாக அவருக்குக் கைவந்திருக்கிறது. இந்த நூல் முழுவதும் அவர் இருக்கிறார். ஆனல் அவர் கவனப்படுத்திய எண்ணற்ற விஷயங்களில் கலந்து பரவியிருக்கிறார் என்பதுடன் அவற்றால் உருவாக்கப்பட்ட சுயத்தைக் கொண்டவராக இருக்கிறார். சுயவரலாற்று எழுத்துக்களை மேற்கொள்ளும் யாருக்கும் பெருமாள்முருகனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
No product review yet. Be the first to review this product.