இந்த நாவலின் கதாபாகங்களில் ஏழு ஏடுகளாக உடல் பெற்றாள் பாழி. ஏழுமலை தாண்டி, இலந்தைக்கொடி ஒதுக்கி, ஒரு பூ பூத்ததும் முதலாம் புத்தகமானாள். ஆனைகட்டித் தெருவில் இரண்டாம் ரத்தாம்பரப் புத்தகத்தில் வெள்ளைப்பூவும் மஞ்சப்பூவும் ஏந்திய கணிகைகள் இருவரைக் கூட்டிவந்தாள். மூன்றாம் புத்தகத்தில் மூன்று பூ திறந்து ஏகலைவன் தாவிவரும் வில்திறம் அதிரும் கானகத்தில் வேடபுராண ஏடானாள். கருப்பு டியூலிப் பூவால் இருட் புத்தகம் திறந்தாள். வேறொரு திசையில் குருடர்களின் கண்ணேடு தடவினாள் பாழி. சிற்பவயல் ஏடும் சித்திரவயல் ஏடும் அருகரும் அபிதரும் ஆகி மயிற்பிஞ்சத்தால் தூற்றுத் தூற்று எறும்புகளின் கோடுகள் அழியாமல் கேட்டுச்சொல்ல வந்தாள் முதல் கதையை... ‘உலகம் விரிகிற ஒரு தானியம்’ என்றாள் முதல் ஸ்திரீயான தானியாள் எனப்பட்ட பச்சைநிறமானவள். இமைகள் மூடிய அகலமான அந்த தானியத்தைச் சுற்றிவந்த கல்பறவையை தானியாள் கேட்டாள், ‘யாருக்காக இனி இராஜ்ஜியத்தை அமைக்கப்போகிறார்கள்’ 'கண்ணீருக்காகவும், தானியமணிகளில் பிறக்கப்போகிற உன் குழந்தைகளுக்காகவும் பறவைகளுக்காகவும் சூதறியா மிருகங்களுக்காகவும் இலைகள் படரும் விருட்சங்களுக்குமாக உலகம் இனி வரும்.’
No product review yet. Be the first to review this product.