Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

மஞ்சள் பிசாசு

(0)
Price: 270.00

In Stock

Book Type
நா.தர்மராஜன்
SKU
ADAIYALAM 031
தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித உலகத்திற்குள் நுழைந்து பணமாக மாறியது? பேராசிரியர் அனிக்கின் இந்தப் புத்தகத்தில் தங்கம் என்னும் மஞ்சள் உலோகம் எவ்வாறு தோண்டி எடுக்கப்படுகிறது என்பதில் தொடங்கி, உலகத்திலுள்ள தங்கம் அனைத்தும் எங்கே செல்கிறது என்று படம்போட்டுக் காட்டுவது மூலம் நம்மை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். மேலும் தங்கத்திற்காக நடந்த இனப்படுகொலை பற்றியும் தேசங்களின் வரலாறு, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின் மீது தங்கம் வைத்திருக்கும் கடுமையான பிடி என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார். இதன் மூலம் இந்த நூல் பன்னாட்டுப் பணவியல் முறையில் தங்கம் என்ன பங்கு வகித்தது, வகிக்கிறது, தங்கத்தின் ஆதரவு இல்லாமல் பணத்திற்கு மதிப்பு இருக்குமா, இந்தப் பணவியல் முறையில் தங்கத்தின் தரம் என்ன வேலை செய்கிறது போன்றவை பற்றிய தெளிவான விளக்கம், வாசகருக்கு நாணயமுறையின் நெருக்கடிகளையும் அவற்றின் பரிணாமங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. இரசவாதம் பற்றிய சில ஆர்வமூட்டும் விவரிப்புகளும் இடம் பெறுகின்றன. தங்கத்தின் 'உண்மையான மதிப்பு' உறித்து எடுக்கப்பட்டப் பிறகு பணத்தின் பங்கு என்ன? புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் எழுதிய மஞ்சள் பிசாசு என்னும் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வியப்புகள் ஒளிந்திருக்கின்றன.படிக்கும் போது எவ்வளவு 'அற்புதமான புத்தகம்" என்பதைப் புரிந்துகொள்வீர்கள்! இதனால்தான் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் பிறரிடம் படிக்கக் கொடுத்தால் திரும்ப வராது! 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.