கதையின் பல்வேறு கதைமாந்தர்களின் அறநிலை பலவேறு நிலைப்பட்டதாக உள்ளது. சூழ்நிலை மற்றும் வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து, எதையும் பயன்படுத்திக் கொள்பவர்களாகவே கதாபாத்திரங்கள் உள்ளனர். ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கும் உள்ள அறநிலை குறித்த பார்வையில் உள்ள சமனற்ற தன்மை, கதையை முன்னெடுத்துச் செல்லும் உந்துசக்தியாக உள்ளது. அறநிலை குறித்து முழுபார்வையை அடைய, மறைக்கும் மாயநந்தியை விலக்க வேண்டும். மனிதர்கள் இயல்பாக பெரும் எதிர்பார்ப்பற்று வாழ்ந்தாலே போதும், மாயநந்தி மறைக்காது என்பதைதான் பிரபாகரன் வலியுறுத்த விரும்புவதாக நான் கருதுகிறேன். அதையும் மிகவும் சன்னமான குரலில் சொல்கிறார். பிரபாகரன் அடிப்படையில் யதார்த்தவாதி. இந்நாவல் லக்னோவை தளமாக கொண்டு எழுதப்பட்டது. 1990களில் தாராளமயம் இந்தியாவில் வலுவான காலத்தில், தகவல் தொழிநுட்பம் தனது பால்யத்தில் இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல் இது. சுதந்திரத்திற்குப் பிறகு மந்தமாக சென்று கொண்டிருந்த வரலாறு, தகவல் தொழில்நுட்பம் என்ற நவீனத்தின் மூலம் வேகம் பிடித்த போது எழுதப்பட்ட நாவல். ஆனால் இந்நாவலில் உள்ள கதைமாந்தர்கள் அனைவரும் தங்கள் முன்னர் உள்ள சவால்களில் இருந்து மீண்டு விடமுடியுமென மும்முரமாய் முயல்பவர்கள்தான். ஆனால் நாவல் இயல்பாய் இருந்தாலே போதும், மாயநந்தி மறைக்காது; தடுக்காது; உண்மையின் தரிசனத்தைக் காணலாம் என்று கூறி முடிகிறது.
No product review yet. Be the first to review this product.