ஆனந்த விகடன் இதழில் வெளியான கதைகளின் தொகுப்பு. வெளிவந்த காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற கதைகள் இவை. குறிப்பாக கால இயந்திரத்தில் பெரியாரை அழைத்துவந்து சமகாலச் சூழலில் நிகழ்த்தும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட 'ஜீன்ஸ் பெரியார்' கதை, மகத்தான வரவேற்பைப் பெற்றதுடன் உரையாடல்களையும் தொடக்கிவைத்தது. புத்தர், பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், காந்தி போன்ற வரலாற்று மனிதர்களில் இருந்து இளையராஜா, தனுஷ் என சமகால ஆளுமைகள் வரை கதைமாந்தர்களாகக் கொண்டவை இந்தக் கதைகள். எதார்த்தவாதம், மீ புனைவு, அ-நேர்கோட்டுக் கதைசொல்லல், அறிவியல் புனைவு என பல்வேறு வடிவங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், வாழ்க்கை குறித்த புதிய பார்வைகளை முன்வைப்பவை.
No product review yet. Be the first to review this product.