ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன், துல்லியமும் தீவிரமும் குன்றாமல் வாழ்வைப் பதிவுசெய்கிறார். இதுவரை எந்தத் தொகுப்பிலும் இடம்பெறாத இந்தக் கதைகள் அசோகமித்திரன் கதையுலகின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.
No product review yet. Be the first to review this product.