எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புதிய சிறுகதைத் தொகுப்பும் வடிவத்தாலும் வாழ்வின் மர்மங்களை தொட்டுத்திறக்கும் வசீகரத்தாலும் தனித்துவமுடையதாக இருந்திருக்கின்றன. மனித இருப்பின், மனித உறவுகளின் அபத்தங்களும் விசித்திரங்களும் அவரது கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு இந்தத் தொகுப்பும் சிறந்த உதாரணம். இதில் இடம்பெற்றுள்ள சில கதைகளில் புதுமைப்பித்தன், கவிஞர் ஆத்மாநாம் போன்ற ஆளுமைகள் கூட கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வழியே ஆழமான உரையாடல்களை எஸ்.ராமகிருஷ்ணன் உருவாக்குகிறார். இக்கதைகள் சிறுதுயரங்களில் வீழ்ந்த மனிதர்களை ஆற்றுப்படுத்தவே முயற்சிக்கின்றன. மேலும் அவை புனைவுகளின் விசித்திரங்களால் ஆனதென்றாலும் அதன் வேர்கள் யதார்த்தவாழ்வில் புதையுண்டிருக்கின்றன.
No product review yet. Be the first to review this product.