அ.மி., சு.ரா., வெ.சா மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் கதைகள் சிலவற்றையும், நாம் வாசிக்கவேண்டிய கதைகளையும் தொகுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எத்தொகுப்பிலும் இடம்பெறாத, ‘புலியா!’ என்ற கதையையும் சேர்த்திருக்கிறேன். எனவே, தேர்ந்தெடுத்த, சிறந்த என்கிற வழமையான தலைப்புகளுக்குப் பதிலாக, ‘வாசிக்கவேண்டிய’ என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை. பிரபலமான கதைகளை விட, அதிக அழுத்தம் தரவேண்டியது பிரபலமற்ற கதைகள் மீதுதான். உலகப் பிரசித்திபெற்ற மூக்கைவிட, உலகப் பிரசித்தி பெறாத மூக்குகளின்மீது நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. - ராணி திலக்
No product review yet. Be the first to review this product.