சுந்தர ராமசாமியின் பாடுபொருட்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்த காலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருட்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு பற்றியும் அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றையும் அலசுகின்றன. அலசலின் முத்தாய்ப்பாக சமகால வாழ்வு சார்ந்த ஒரு கருத்து நிலையை வந்தடைகின்றன. அந்தக் கருத்தாக்க நிலை அவரே குறிப்பிட்டது போல கோட்பாடுகள் சார்ந்து அமைவதல்ல.
No product review yet. Be the first to review this product.