“ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு · தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? · நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது? · தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது? · தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா? · கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா? தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது. வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.”
No product review yet. Be the first to review this product.