இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள். இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு நிதி மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது.
இந்தியாவை அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன்.