பருவகால விழாக்களைக் கொண்டாடும் விதமாக தாகூர் இரண்டு நாடகங்களை எழுதியுள்ளார். அதில் ஒன்று The Cycle of Spring என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி 1917இல் வெளிவந்தது. இது முற்றிலும் இயற்கையைப் போற்றும் நாடகம். சலசலக்கும் மூங்கில் இலைகளும் பறவைக் கூடுகளும் பூத்துக் குலுங்கும் கிளைகளும் வசந்தத்தின் வருகையை அறிவிப்பவை. இவற்றைப் பாடும் இசைப் பாடல்களால் நிரம்பியிருக்கிறது இந்த நாடகப் பிரதி.
இந்திய இலக்கியத்தில் இது ஒரு செவ்விலக்கிய நூல். பருவகாலம் குறித்த தாகூரின் மற்றைய நாடகப் பிரதி 'Autumn Festival'.
No product review yet. Be the first to review this product.