இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி, கல்லூரி மாணவராயிருக்கும் போது, டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு இந்த நூலையே தேர்ந்தெடுத்தார். ஹிட்லரின் படுக்கையறையில் அவர் படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் ’இளவரசன்’ நூல் மிக முக்கியமானது. மாகிஸ் வேனர் என்ற பேராசிரியர் இந்த நூலுக்குத் தாம் எழுதியுள்ள முன்னுரையில், லெனினும், ஸ்டாலினும் கூட மாக்கியவெல்லியின் இந்த நூலைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 1559-ஆம் ஆண்டில் ரோம் பேரரசால் தடை செய்யப்பட்ட நூல் பட்டியலில் இந்த நூலும் சேர்க்கப்பட்டது. நிக்கோலோ மாக்கியவெல்லி வேறு பல நூல்களை எழுதி இருந்தாலும் இவருக்குப் புகழையும், எதிர்மறை விமர்சனத்தையும் பெற்றுத் தந்த நூலாகவும் புகழ்வாய்ந்த நூலாகவும் ’இளவரசன்’ உள்ளது. இது ஒரு பழமையான அரசியல் நூலாக இருந்தாலும், தற்கால அரசியலுக்கும் ஏற்றவாறு இருப்பதாகப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். எப்படியாயினும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாகத் திகழ்கிறது.
No product review yet. Be the first to review this product.