இந்த நூல், மெளலானா ரூமியின் ‘ஃபீஹி மா ஃபீஹி’ என்னும் நூலின் மூல ஃபார்சீ பிரதியையும், அப்துர் றஷீது தபஸ்ஸும் செய்த அதன் உருது மொழிபெயர்ப்பையும், W.M.தாக்ஸ்டன் ஜூனியர் செய்த அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் துணையாய்க் கொண்டு தமிழில் பெயர்க்கப்பட்டதாகும். A.J.ஆர்பெர்ரி செய்த ஆங்கிலப் பெயர்ப்பும் ஒப்புநோக்கப்பட்டது. ‘ஃபீஹி மா ஃபீஹி’ என்பதன் நேரடியான அர்த்தம் ‘அதில் என்ன உள்ளதோ, அதுவே அதில் உள்ளது’ என்பதாகும். இதை இன்னும் பல வழிகளில் அர்த்தப்படுத்தலாம். ‘அது என்னவோ அதுவேதான் அது’ என்று ஓர் அர்த்தம் தருகிறது மலேசிய ஆங்கிலப் பதிப்பு. ‘அதில் என்ன இருக்கிறதோ, அதுவே இதில் இருக்கிறது’ என்பது இன்னொரு சாத்தியமான அர்த்தம். அதாவது, ரூமியின் ஞானக் காவியமான மஸ்னவீயில் என்ன ஞானம் இருக்கிறதோ, அதுவே இந்த நூலிலும் இருக்கிறது. அதில் கவிதையாக இருக்கும் ஸூஃபி ஞானமே இதில் உரைநடையாக விளக்கப்பட்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.