கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல் சூழலில், குறிப்பாகத் திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதன் 50ஆம் ஆண்டு, கலைஞர், ஜெயலலிதா என்னும் இரு தலைவர்களின் மரணங்கள், அரைநூற்றாண்டுக்குப் பிறகு தி.மு.க.வுக்குப் புதிய தலைமை, அ.தி.மு.க.வில் நடந்த அணி மோதல்கள் என முக்கியமான பல நிகழ்வுகள் நடந்துள்ளதால் அது குறித்து விமர்சனப் பார்வையை முன்வைக்கிறது இந்தப் புத்தகம். ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான்’ என்று பலரும் உரிமை கொண்டாடும் சூழலில் ‘திராவிடக் கட்சிகளுக்கான மாற்று’ என்னும் கருத்தாக்கம் குறித்தும் திராவிடக் கட்சிகளின் எதிர்கால இயங்குதிசை குறித்தும் நுட்பமான பார்வைகளை முன்வைக்கிறது இந்நூல்.
No product review yet. Be the first to review this product.