உயிர்த்திருத்தலுக்கும் உயிரழித்தலுக்குமிடையிலான, உயிர்ப்புடன் இருத்தலுக்கும் உயிரியாக மட்டும் இருத்தலுக்கும் இடையிலான ஓயாத இயங்கியலை விளக்கும் அந்த நூலின் மையம் வன்முறைதான். அடிமைப்படுத்தலின் வன்முறை, விடுதலைக்கான வன்முறை, ஓசையற்ற வன்முறை, ஓலமிடும் வன்முறை, நிறத்தின் வன்முறை, நிறமழிந்த வன்முறை, இருத்தலின் வன்முறை, இல்லாமல் போதலின் வன்முறை.” வாழ்தலுக்கான தனது ஒவ்வொரு செயலும் வன்முறையாக, உயிர்த்திருத்தலுக்கான ஒவ்வொரு முயற்சியும் குற்றமாக விதிக்கப்பட்ட மனிதர்கள் என்ன செய்வார்கள்? விடுதலைக்கான ஒவ்வொரு பேச்சும், நகர்வும் வன்முறை என்று அடையாளப்படுத்தப்பட்ட பின் வன்முறையற்ற இருப்பு என ஏதாவது உள்ளதா? அடிமைப்பட்டவர்கள், துயரில் வாழ்பவர்கள், தன் மீதான குற்றங்களின் முன் தம்மை ஒப்புக்கொடுக்கிறார்கள்; வன்முறையை நிகழ்த்துவதில்லை, அதனை ஏற்கிறார்கள். அவர்கள் வன்முறையை வணங்குகிறார்கள். தம் மீதான வன்முறையின் முன் மண்டியிட்டுத் தொழுகிறார்கள். வன்முறையைத் தமது நீதியாக, பெருமிதமாகக் கொண்ட புனித வன்முறைகளின் கேளிக்கைகள் எந்தக் கட்டத்திலும் ஓய்வதில்லை. அவை இசையாக ஒலிக்கலாம், வெடிச் சத்தமாக அதிரலாம், நிசப்தமாகப் பரவலாம். வன்முறையின் கொண்டாட்டம் எத்தனை வடிவங்கள் கொண்டது, வன்முறைதான் மனிதர்களின் ஆகப்பெரும் திளைப்பு. அதுதான் போர்களை, பேரரசுகளை, பெரும் சாதனைகளை உருவாக்குகிறது.hir Veeliyudu
No product review yet. Be the first to review this product.