இயற்கையோடு தொடர்புகொண்டிருந்த நம் முன்னோர்கள் தன்னைச் சுற்றி இருக்கும் மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி ஆகியவற்றின் மூலம் பல வைத்தியங்களை அறிந்து வைத்திருந்தனர். பாட்டி வைத்தியம் என்றும் கைவைத்தியம் என்றும் கூறப்படும் நாட்டு வைத்தியம் பார்த்த காலம் போய், சிறு சிறு உபாதைகளுக்கும் மருத்துவமனை வாயிலில் போய் நிற்கும் காலம் இப்போது. காரணம் நம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்டு மருந்துகளையும் மருத்துவம் செய்துகொள்ளும் முறையையும் மறந்துபோய்விட்டோம். மஞ்சள், மிளகு, கிராம்பு என அஞ்சறைப் பெட்டி சமையல் பொருள்களே, நமக்கு ஏற்படும் உபாதைகளைப் போக்கும் குணம் கொண்டவை. நந்தியாவட்டை, முருங்கை, பவழமல்லி, மருதோன்றி, செம்பருத்தி, சிறுகுறிஞ்சான், வல்லாரை - இவை போன்ற இன்னும் பல மூலிகைச் செடிகள் மூலம் எல்லாவித நோய்களுக்கும் தீர்வுகாணலாம் என்பதையும் அவற்றைக் கொண்டு செய்துகொள்ளும் மருத்துவமுறைகளையும் கூறுகிறது இந்த நூல். அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக்கொள்ளும் நாட்டு மருத்துவத்தின் மகத்துவம் அறிவோம், ஆரோக்கியம் பெறுவோம்!
No product review yet. Be the first to review this product.