சமீப காலமாய் விரும்பி வாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் ஜி. கார்ல் மார்க்ஸ். அவரது முதல் சிறுகதைத்தொகுப்பு “வருவதற்கு முன்பிருந்த வெயில்” நன்னம்பிக்கை பெறுவதாக இருந்தது. “ராக்கெட் தாதா” என்ற இந்த இரண்டாம் தொகுப்பு காதாசிரியனின் தீர்மானமான முன்நகர்வு. எனக்கு அவருடன் எந்த அறிமுகமும் இல்லை, எழுத்து நீங்கலாக. இத்தொகுப்பின் முதல் கதையான “படுகை” வாசித்த கணத்தில் அது வெளியான இதழின் ஆசிரியரான கவிஞர் மனுஷ்யபுத்திரனை தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் சொன்னேன். தலைப்புக் கதையான “ராக்கெட் தாதா” தொகுப்பின் முதன்மையான கதை. “காலம் என்பது ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது” போன்ற கவித்துவமான வரியை நீங்கள் சங்கப்புலத்தில் தரிசிக்கலாம். ஆடும் அரவம் பார்த்ததுபோல திகைப்பை தெளித்துச்செல்லும் சிறுகதை “சுமித்ரா”. வாசகனை ஐக்யூ டெஸ்ட்டுக்கு ஆட்படுத்த முனையாத, உரையாடல் செழிப்புள்ள, அனுபவச்செறிவும் வாசிப்பு ஈர்ப்பும் புதுமையும் கொண்ட எழுத்து. - நாஞ்சில் நாடன்
No product review yet. Be the first to review this product.