அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான, மர்மமான, ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள், கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைக்கிறது இந்த நூல்.
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது.
ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.
No product review yet. Be the first to review this product.