அறிவியல் விசித்திரங்களும் புதிர்களும் எப்போதும் ஆர்வம் தருபவை. ஆனால் அவற்றையெல்லாம் எல்லாருக்கும் புரியும் வகையில் சொல்வதுதான் சவால். தமிழில் அறிவியல் எழுத்துகள் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம், எளிமையாக அறிவியலைச் சொல்லும் இந்தச் சவால்தான்.
கார்த்திக் ஶ்ரீனிவாசன் சில அறிவியல் விசித்திரங்களை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படைகளை விளக்கி இருக்கிறார், சுவாரஸ்யமான தமிழில்.
இரு சூரியன்கள் உருவாகுமா, நள்ளிரவில் சூரியன் வருமா, பெர்முடா முக்கோணம் என்பது என்ன போன்ற அறிவியல் விசித்திரங்களை இப்புத்தகத்தில் விளக்குவதோடு, ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளை, காலப் பயணம் போன்றவற்றையும் தெளிவாக எழுதி இருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.