சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர்: பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ. உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம். அது மட்டும் அல்ல, இது அந்த இனம் வாழும் நிலம்/இடம், அது சார்ந்திருக்கும் வர்க்கம் போன்றவற்றையும் அடையாளப் படுத்தக் கூடியது. இந்தப் பின்னணியில் காயத்ரியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள இரண்டு சிறுகதைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. அக்கதைகளில் இடம் பெறும் உரையாடல்களின் மூலம் சென்ற தலைமுறையின் பேச்சு வழக்கு இலக்கியத் தகுதியைப் பெறுவதோடு அல்லாமல் அத்தலைமுறையின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டு விடுகிறது. நான் உதாரணங்கள் தரப் போவதில்லை. அதை வாசகரே படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்பதால்.
No product review yet. Be the first to review this product.