தமிழ் வட்டார நாவல் இலக்கியத்தின் முன்னோடி ஆர். ஷண்முகசுந்தரம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். கொங்கு வட்டார மொழியும் வாழ்வும் அவர் படைப்புகளில் துலங்கி நிற்கின்றன. 1942இல் வெளியான 'நாகம்மாள்' நாவலை 'இந்திய வட்டார இலக்கியத்தின் முன்னோடி' என்று க.நா.சு. சொல்கிறார். ஆர். ஷண்முகசுந்தரம் ‘மணிக்கொடி' இதழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிப் பிறகு நாவலாசிரியராக உருவானார். இந்தி வழியாக வங்க மொழி நாவல்கள் பலவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அவரது மொத்தப் படைப்புகளைப் பற்றிய அறிமுகமாகவும் விமர்சனமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. முன்னோடிப் படைப்பாளர் ஒருவரது படைப்புகளை அணுகும் முறைக்குச் சான்றாக இந்நூல் விளங்குகிறது. சுயபார்வை, விமர்சன மொழி, எளியநடை, வாசிப்புத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இனிய படைப்புப் பயணமாக விளங்கும் நூல் இது.
No product review yet. Be the first to review this product.