நிகழ்ந்தே ஆகவேண்டும் என என்னை சுண்டிய கதைகளை மட்டுமே இங்கே படைத்திருக்கிறேன். தனது கம்பீரம் அறியா யானைக்குட்டி ஒன்று குட்டை ஒன்றில் புரண்டு விளையாடும் விளையாட்டைத்தான் இங்கே நிகழ்த்தி இருக்கிறேன். இந்தக் கதைகளின் முடிவில் இலக்கியக் கரையில் நின்று உண்மைகளை வேடிக்கைப் பார்க்கும் ஒரு முதியவளாய் முதிர்ந்திருக்கிறேன். நேர்மையான கதைகளில் வார்த்தைகளைத் தேடிச் சொருகும் சிரமங்கள் இருப்பதில்லை. உண்மையுடன் பயணிக்கும் கதைகளில் நிகழும் கற்பனைகளும் போலிகளைஏற்பதில்லை.கற்பனைக் கதாப்பாத்திரங்களும் தங்களுக்கென ஒரு நிரந்தரத்தை அடைந்திருக்கும் கதைகளும் இங்கு உள்ளன.
No product review yet. Be the first to review this product.