அயோத்திதாசரின் சிந்தனை முறை வரலாற்றையும் இலக்கியங்களையும் புராணங்களையும் முற்றிலும் புதிய பார்வையில் அணுகுகிறது. அவருடைய சிந்தனைப் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை ஒரு பார்வைக் கோணமாக வளர்த்தெடுப்பதை மையமாகக் கொண்ட நூல் இது. அந்தக் கோணத்தின் அடிப்படையில் சமூகத்தின் வெவ்வேறு தருணங்களை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் விமர்சிக்கவும் முடியும் என்பது இந்நூலின் வாதம். நம்பகமான தரவுகள், அறிவியல்பூர்வமான ஆய்வு முறை, அபாரமான தர்க்க அணுகுமுறை ஆகியவற்றைக் கைக்கொண்டு அயோத்திதாசரின் ஆளுமைச் சித்திரத்தை ஸ்டாலின் ராஜாங்கம் தீட்டுகிறார். அயோத்திதாசரின் ஆளுமையை அவருடைய சிந்தனையின் வழியாக இந்நூல் கட்டமைக்கிறது.
No product review yet. Be the first to review this product.