வைதீகத்திற்கும் மரபுவழிச் சடங்கு வழிபாட்டு முறைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அய்யா வைகுண்ட சாமிகள். புத்தர், மகாவீரர், குருநானக் போன்றோர் வரிசையில் சமூகக் கிளர்ச்சியாளரென முத்துக்குட்டி சாமிகள் எனப்பட்ட அய்யா வைகுண்டரைக் குறித்து இந்நூல் பேசுகிறது. சாமிகளின் பிறப்பிலிருந்து தொடங்கி ஞானம் அடைந்து வாழ்ந்த நிலைவரையிலுமான விவரங்களைச் சுவாரசியமான தகவல்களுடன், அந்தந்த வட்டாரப் பகுதிகளில் புழக்கத்திலுள்ள கதைப்பாடல்கள், செவிவழிச் செய்திகளின் வழியே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். அய்யா வைகுண்டர் திருமாலின் அவதாரமாகக் கருதப்பட்டு வழிபடும் தெய்வமாகியதை விளக்கும் இந்நூல் தனிமனிதனின் ஆன்மிகப் புரட்சியையும் அதன்மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் பதிவுசெய்துள்ளது. நாட்டார் கலை, வழிபாட்டு மரபுகள் ஆகிய துறைகள் சார்ந்த அறிஞர் அ.கா. பெருமாள் அய்யா வைகுண்டரைப் பற்றிய தகவல்களைப் பல்வேறு தரவுகளிலிருந்து திரட்டி, சுவையான வாசிப்புக்குரிய வகையில் தொகுத்தளிக்கிறார்.
No product review yet. Be the first to review this product.