இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச் செவ்வியலிலக்கியங்களுக்கு நிகரானது சங்க இலக்கியம் என நிறுவும் நிலைக்கு அடித்தளம் அமைத்த முன்னோடி உ.வே. சாமிநாதையர். உலகப் பார்வையோடு தமிழ்க் கவிதை வரலாற்றில் வடிவத்திலும் பொருண்மையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதி. பண்டைத் தமிழின் குறியீடு உ.வே.சா. புதுமைத் தமிழின் உருவம் பாரதி. இருவரும் சமகாலத்தவர். நேரடியாகப் பழகியவர்கள். தமிழரசர் என உ.வே.சா.வைத் தொடக்கத்திலேயே கொண்டாடியவர் பாரதி. பாரதியின் பேராளுமை வெளிப்படாத பருவத்திலேயே பாரதியை அரவணைத்ததோடு மறைவுக்குப் பிந்தைய காலத்திலும் பாரதியின் இடத்தை எழுத்தாலும் சொல்லாலும் அங்கீகரித்தவர் உ.வே.சா. எனினும் பாரதியாரை உ.வே. சாமிநாதையர் அங்கீகரிக்கவில்லை எனும் கருத்து பரவலாகவும் வலுவாகவும் காணப்படுகிறது. மேலும் பல சர்ச்சைகளும் விவாதங்களும் எழுப்பப்பெறும் பாரதி - உ.வே.சா. தொடர்பு வரலாற்றை முதன்முதலாகக் கண்டுபிடித்த புதிய ஆவணங்களின், முதல்நிலை ஆதாரங்களின் துணைகொண்டு ஆராய்ந்து உண்மைகளைத் தெளிவுபடுத்தித் துலக்கிக் காட்டுகிறது இந்நூல். பாரதியியலுக்கு மேலும் ஒரு பெரும்பங்களிப்பைச் செய்திருக்கிறார் ய. மணிகண்டன்.
No product review yet. Be the first to review this product.