உலகின் முதல் புரோகிராமர் அடா லவ்லேஸ், நிலவில் கால் பதித்த விண்கலத்தை வழிநடத்திய மென்பொருளை உருவாக்கிய மார்கரெட் ஹாமில்டன், நவீன கம்ப்யூட்டர் மொழிகளுக்கு அடித்தளம் அமைத்த பார்பரா லிஸ்கோ, மென்பொருள் மகாராணி என அறியப்படும் கிரேஸ் ஹாப்பர், ஸ்டீவ் ஜாப்சிற்கு ஊக்கமாக அமைந்த அடிலி கோல்ட்பர்க், இணையத்தேடலுக்கு அடித்தளம் அமைத்த கரேன் ஸ்பார்க் ஜோன்ஸ் என கம்ப்யூட்டர் உலகில் முன்னோடிகளாக திகழும் பெண்களின் கதைகளை சொல்கிறது இந்த புத்தகம். கம்ப்யூட்டர், இணைய வரலாற்றில் தடம் பதித்த பெண்களை அறிமுகம் செய்வதோடு, கம்ப்யூட்டர் வருகைக்கு முன்னர் மனித கம்ப்யூட்டர்களாக இருந்த முன்னோடி பெண்களின் அதிகம் அறியப்படாத கதைகளை விவரிக்கும் கட்டுரைகளை கொண்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.