வள்ளலார் பாடலைக் கோவிலில் பாட முற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு
,தம் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும்
நீங்கியமை ,சத்திய ஞான சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் என்று பெயரிட்டது
,ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்கு பதிலாக ஒளிவிளக்கு ஏற்றி வழிபடச்
செய்தது ,இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டவாறே சிதம்பரம் கோயிலை அணுக
வேண்டும் .
தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் சிதம்பரம் கோயிலின் அர்த்தமண்டபத்தில் தமிழ்பாட
ஒரு இயக்கம் நடத்தியதும் அவர் தோற்றுப்போனார் என்பதும் குறிப்பிடத்
தகுந்தவை.
வ.சுப.மா தோற்றுப்போன பின்னர் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியார் மேடையில்
தமிழில் பாடி வழிபட வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார்.உயர் நீதிமன்றம்
அதனை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது.தமிழக அரசும் அதனை ஏற்று ஆணை
வெளியிட்டது.அவர் கோயிலுக்குள் சென்று தமிழில் பாடி வழிபாடு செய்தார்
.கோயிலுக்கு பொன் வேய்ந்த மாமன்னர்களும் பெற முடியாத உரிமையினை
சிவனடியார்கள் பெற்றனர் .வள்ளலாரின் கனவு நனவாயிற்று .
No product review yet. Be the first to review this product.