மெக்ஸிக்கோவின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவர் யுவான் ரூல்ஃபோ...
”யுவான் ரூல்ஃபோ அதிகபட்சம் முந்நூறு பக்கங்கள்தான் எழுதியுள்ளார், ஆனால் அவையே, சோஃபக்ளீஸிடமிருந்து நாம் பெற்றுள்ளவற்றிற்குக் கிட்டத்தட்ட இணையான எண்ணிக்கையிலானவை, என்றும் நீடித்து நிற்பவை என்றும் நான் நம்புகிறேன்.”
- காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
இந்தக் கதைகளை விவரிப்பதற்கான கச்சிதமான சொல் பச்சை யதார்த்தம், வாழ்வில் கச்சாத்தன்மையில் மையம் கொண்டுள்ள யதார்த்தம் என்பதே ஆகும். மிகச் சிக்கனமானவையாக உள்ள இந்தக் கதைகள் ஒரு கூரிய கத்தியைக் கொண்டு மனித உறவுகளைக் கூராய்கின்றன.
…ரூல்ஃபோவை வாசிப்பதென்பது ஒரு கறிக்கடை வல்லுநரைக் கவனிப்பதற்கு ஈடானது: அவரது கத்தி ஒரே சமயத்தில் கலாபூர்வமானதாகவும் கருணையற்றதாகவும் உள்ளது. ரூல்ஃபோவை மொழிபெயர்ப்பதென்பது அதே கத்தியை எடுத்துக்கொண்டு வேறொரு வகை விலங்கினை அறுக்க முயல்வதற்கு ஒப்பானதாகும்.
…அவற்றின் ஆழம் கிட்டத்தட்ட விவரித்துத் தீராததாக இருக்கிறது: வெகு சில தீற்றல்களிலேயே, ஒரு பாழ்பட்ட சிக்கலான மானுட வாழிடத்தை ரூல்ஃபோ உருவாக்கிவிடுகிறார். இந்தக் கதைகள் விழுமியம் சார்ந்த பாடங்களாகவும் உள்ளன.”
- இலன் ஸ்தவன்ஸ்
No product review yet. Be the first to review this product.