அத்தியாவசியவாதம் என்பது வெறுமனே ஒரு நேர நிர்வாக உத்தியோ அல்லது மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கான உத்தியோ மட்டுமல்ல. அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து, மற்ற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் ஓர் ஒழுங்குடன் மேற்கொள்வதுதான் அத்தியாவசியவாதமாகும். • வீட்டில் அல்லது அலுவலகத்தில், ‘இதற்கு மேல் என்னால் முடியாது’ என்ற நிலையை நீங்கள் எப்போதாவது அடைந்ததுண்டா? • அதிகமாக வேலை செய்தும் குறைவானவற்றையே சாதித்துள்ளதுபோல நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா? • படுசுறுசுறுப்பாக இருந்திருந்தும் ஆக்கபூர்வமாக எதையும் செய்திருக்கவில்லை என்ற உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா? • எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்து வந்துள்ளபோதிலும் எங்கும் போய்ச் சேர்ந்திருக்காததைப்போல நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா? இக்கேள்விகளில் எவற்றுக்கேனும் ‘ஆமாம்’ என்று நீங்கள் பதிலளித்திருந்தால், நீங்கள் ஓர் அத்தியாவசியவாதியாக மாறுவதே உங்களுக்கான ஒரே தீர்வு.
No product review yet. Be the first to review this product.