புதிய சிந்தனை முறைகளின் உருவாக்கம், பழமை அடையாள நீக்கம் அரசியல் மாற்றம் இவையே எனது இலக்கிய உரையாடலுக்கானவை என்று விளக்கும் பதிவுகளாக இவை உள்ளன. அழகியல், அறவியல், அரசியல் என்பதன் இணைப்பு பற்றி தன் தொடர் இணைய உரைகளின் வழி அவர் விளக்குவதை இன்னும் கூடுதலாகப் புரிந்து கொள்ள இந்த உரையாடல்கள் துணையாக உள்ளன. "மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை... அது தான் இன்றைக்கான அழகியல், கவிதையியல்... அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த்தெடுப்பதும்தான் அறிவுத்தளத்தினர், சிந்தனையாளர்கள், மக்களுக்கான இலக்கியவாதிகள் என்பவர்களின் பணி, வாழ்வு எல்லாம்..." என அவர் குறிப்பிடுவதற்கான விரிவான விளக்கங்கள் இந்த உரையாடல் பக்கங்களில் உள்ளன.
No product review yet. Be the first to review this product.