கர்நாடகாவில் ஹிஜாப் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் யாசிர் காழி, சர்வதேச அளவில் ஹிஜாபுக்குத் தடை விதிக்கப்படுவதன் பின்னுள்ள அரசியல், அதன் வரலாற்றுப் பின்புலம், ஆடை ஒழுங்கின் அவசியம், ஹிஜாப் பற்றிய இஸ்லாமியச் சட்டவியல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து நிகழ்த்திய உரைகளை சற்று சுருக்கி தமிழாக்கம் செய்து இந்நூலில் வழங்கியிருக்கிறோம். கல்விப்புலத்திலும், அரசியல் மட்டங்களிலும் நடைபெறும் கனமான பேசுபொருளையும் எளிய வாசகர்களுக்குப் புரியும் மொழியில் முன்வைப்பது யாசிர் காழியின் தனிச்சிறப்பு. ஹிஜாப் பற்றிய இந்த உரைகளிலும் அதுசார்ந்து நடைபெற வேண்டிய முக்கியமான விவாதங்களை அவர் கச்சிதமாகத் தொகுத்தளிக்கிறார்.
No product review yet. Be the first to review this product.