இத்தொகுப்பிலுள்ள ஒருபகுதிக் கவிதைகள், நிகழ்காலத்தில் மறைந்திருக்கும் கடந்த காலத்தின் இருப்பை நினைவேக்கமற்றுச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. மறுபகுதிக் கவிதைகள், ‘இல்லாத இன்னொரு பயணத்திற்கான’ தயாரிப்புக் குறிப்புகளாகவும் இரங்கற்பாடலின் மூட்டமுள்ளதாகவும் சுதந்திரமான ஹைக்கூவின் அம்சமுள்ளவையாகவும் உள்ளன. இக்கவிதைகள், ஆழ்ந்த மௌனத்தைத் தமக்குள் கடத்திக்கொள்வது மட்டுமின்றி வாசகரிடமும் அதைக் கடத்துகின்றன. ஆசுவாசத்திற்கு எந்த உத்தரவாதமும் அளிக்காமல் வேறொரு கதியில் நிதானிக்க வைக்கும் கவிதைகள் இவை.
No product review yet. Be the first to review this product.