மசூதி இடிப்பு, காஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்ட நிலைமை, அத்வானியின் ர(த்)த யாத்திரை, மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக 'கமண்டலம்' ஏந்திய காவிக் கும்பல் நடத்திய திட்டமிட்ட கலவரங்கள், சமூகநீதிக்குத் தோண்டப்பட்டு வரும் சவக்குழி, சிறுபான்மை இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் மக்கள் மீது சங் பரிவார் நடத்தி வரும் கொடூரத் தாக்குதல்கள், இந்துத்துவ சித்தாந்த எதிர்ப்பாளர்கள் படுகொலைகள், சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் சிந்தனையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போன்றவற்றை செந்திலதிபன் தனது எழுச்சியூட்டும் எழுத்து நடையால் நம் கண் முன்னே சித்திரமாக வரைந்து காட்டி இருக்கிறார்.
- வைகோ, எம்.பி மதிமுக பொதுச் செயலாளர்
**
நூலாசிரியர் செந்திலதிபன் கொள்கை மறவர். திராவிட இயக்கச் சிந்தனைகளை நெஞ்சில் பதித்தவர். புத்தக வாசிப்பை நேசிப்பவர். கடும் உழைப்பை நல்கி இந்நூலை உருவாக்கியிருக்கிறார். இது வெறும் எழுத்துகள் அடங்கிய நூல் அல்ல; நாட்டுக்கு ஆற்றியுள்ள அருந்தொண்டு! 'நூல்'களின் ஆதிக்கத்தையும் வஞ்சகத்தையும் அறுத்தெறியும் நூல் இது! மதவெறி வீழ்ந்து மனித நேயம் செழிக்க, சனாதனம் அழிந்து சமத்துவம் தழைக்க இப்புத்தகம் எங்கும் பரவட்டும்! பாராட்டுகள் - வாழ்த்துகள்!
- கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம்.
No product review yet. Be the first to review this product.