‘ரௌத்திரம் பழகு’ கதையில் வரும் கனகா அக்கா போல வக்கிரம் பிடித்த ஆணின் முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் தைரியம்தான் இன்று தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட துணிச்சலை வாசக மனதில் ஏற்படுத்தும் கதைகளை அடுத்த தொகுப்பில் தருவார் என எதிர்பார்ப்போம். ஒரு சமூக அக்கறையும், நல்லதுக்காக ஏங்கும் மனமும் மனிதாபிமானமும் உயிர்களுக்கு இரங்கும் மனமும் இவரது இந்தக் கதைகளின் வழியெங்கும் விரவி நிற்பதை நாம் அவதானிக்க முடிகிறது. இன்னும் முற்போக்கான திசைவழியில் இன்னும் கலை நுட்பமும் கலை அமைதியும் கூடிய கதைகளை அவர் தருவார் என்கிற நம்பிக்கையை இத்தொகுப்பு நமக்குத் தருகிறது. நுட்பமான அவதானிப்புகளின் வழியே பெண்களின் நுண்ணுணர்வுகளை துல்லியமாக சித்தரித்திருக்கிறார். தேவையான உரையாடல்களின் வழியே அபூர்வமான கதையுலகை நம் கண் முன்னால் காட்சிப்படுத்துகிறார். அந்தக் கதையுலகு நம்மை கோபப்பட வைக்கிறது. கண்ணீர் ததும்ப வைக்கிறது. மௌனமாய் யோசிக்க வைக்கிறது. தமிழ்ச் சிறுகதை உலகிற்குக் காத்திரமான புத்தம் புதிய நல்வரவு விஜிலா தேரிராஜன்
No product review yet. Be the first to review this product.