இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சிக்கலின் விளைவுதான் ‘ஜனநாயகத்தின் சமூக இருப்பு’ என்ற இந்தப் புத்தகம். ஜனநாயகம் என்பது வெறுமனே அரசாங்க வடிவமல்ல என்றும், அது சமூகம் சார்ந்தது, மனக்கட்டமைப்பு சார்ந்தது என்றும் முன்வைத்த பி.ஆர். அம்பேத்கரின் பார்வையிலிருந்து பெற்றுக்கொண்டு, ஜனநாயகத்தைச் சமூக வாழ்க்கை வடிவமாகவும், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பகுதியாகவும் பார்க்க வேண்டும் என்று இந்தப் புத்தகம் வாதிடுகிறது. அம்பேத்கரின் லட்சியத்துக்குப் பொருளியல் சார்ந்தும் கருத்தாக்கம் சார்ந்தும் தடைகள் இருப்பதை அடையாளம் காணும் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை, ஜனநாயகபூர்வமான செயல் என்பதன் பல்வேறு அர்த்தப்பாடுகளையும், வீடு முதல் அரசாங்கங்கள் வரையிலான பல்வேறு புலங்களுக்குரிய ஜனநாயகங்கள் குறித்தும் ஆய்வுபூர்வமாக அணுகுகிறார். மேலும், உழைப்போடும் அறிவியல் மற்றும் மதத்தோடும் ஜனநாயகம் கொண்டிருக்கும் உறவுமுறைகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார். ஜனநாயகத்தின் மையமாக இருக்கும் அறரீதியான செயற்பாங்கு குறித்து விரிவான வாசிப்பை முன்வைக்கிறார். இறுதியாக, அரசியல் உண்மை, சுதந்திரம், தெரிவு குறித்தான கருத்துகளை விளக்கும் அதே வேளையில், ஜனநாயகபூர்வமான உணர்வுகளை வெறுமனே தேர்தல் அரசியலுக்கானதாகச் சுருக்காமல் நம்முடைய வீடுகளுக்குள்ளும் ஜனநாயக உணர்வுகளைக் கொண்டுவர வேண்டும் என்று வாதிடுகிறார்.
No product review yet. Be the first to review this product.