ஜெயமோகன் என் வாழ்நாள் ஆதர்சம். எழுத்திலும் வாழ்விலும். இது வரை படைப்பில் என்னை ஏமாற்றாத ஒரே எழுத்தாளுமை அவர்தான். அவரைப் பற்றி எழுதித் தீராது. இந்தக் கட்டுரைகள் அவரது இலக்கியப் பங்களிப்பைச் சொல்வதோடு அவர் மீதான அவதூறுகளுக்கும் பதிலிறுக்கின்றன. அது ஒரு கண்மூடித்தன ஆதரவாக அல்லாமல் ஆய்ந்து, தரவு மற்றும் தர்க்கம் சார்ந்து அவர் தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றன. அதில் பதற்றமற்ற ஒரு கூறாய்வுத்தன்மை வெளிப்படுகிறது. வெறுமனே அவரை விதந்தோதுவதாக அல்லாமல், அவசியமான இடங்களில் மறுத்தும் எதிர்த்தும் எழுதி இருக்கிறேன். அதை மீறி ஒரு விசிலடிக்கும் ரசிகன் தென்பட்டால் அது அவர் ஆகிருதி!
No product review yet. Be the first to review this product.