காலம் மகிழ் ஆதனை அச்சுறுத்தவில்லை; மாறாக, அவன் அதற்கே உரித்தான குழம்பிய நிலையில் திளைக்கிறான். ஆனால், காலம் என்று அழைக்கப்படும் அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கு, எளிதாக இருத்தல், தான் விரும்பியதைத் தயக்கமோ கூச்சமோ இன்றிச் சொல்லுதல் ஆகிய சக்திவாய்ந்த ஆயுதங்களை அவன் பயன்படுத்துகிறான். அதுதான் இந்தக் கவிதைகளின் பலமாகவும் இருக்கிறது; அவனது சிந்தனையின், கற்பனையின் பலமாகவும் இருக்கிறது… அவனுடைய பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் மிகவும் எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த கூற்று என்னவென்றால் ‘நான்தான் காலத்தைப் படைக்கிறேன்’ என்பது போன்ற உறுதியான வெளிப்பாடாகும்.
- சுந்தர் சருக்கை, பேராசிரியர், தத்துவவியலர்
No product review yet. Be the first to review this product.