திருநர்களின் வாழ்வியல் கூறுகள், உடலியல், உணர்வியல் வெளிப்பாடுகள், நிராகரிப்பின் வலிகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை பேசுகிற அதே நேரத்தில் இந்தக் கதைகள் அவர்களின் காதலையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் கல்வியில் வேலை வாய்ப்புகளில் வாழ்நிலையில் சமூகநிலையில் அவர்கள் மேலெழுந்து வருவதையும் சரியாகப் பேசுகிறது. இத்தொகுப்பு திருநர் இலக்கியத்தின் புதிய முகம். புதிய தொடக்கம். புதிய பாய்ச்சல் எனலாம். அன்றாட வாழ்வில் மாற்றுப் பாலினர் சந்திக்கும் வெவ்வேறு சிக்கல்களை துல்லியமாகப் பேசும் இக்கதைகள் சில இடங்களில் நம்மைப் பிடித்து உலுக்குகின்றன. மாற்றுப்பாலினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைச் சொல்கின்ற கதைகளாகவும், பொதுச்சமூகம் எந்தெந்த நிலைகளில் அவர்களைத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு தவறியிருக்கிறது என்பதைப் பேசும் கதைகளாகவும் பகுக்கலாம் – அழகிய பெரியவன்.
No product review yet. Be the first to review this product.