கோபி குப்பண்ணாவின் முதல் தொகுப்பு இது. குறுங்கவிதைகளில் பெரும்
காட்சிகளைக் கட்டமைக்கிற உத்தி, நெடுங்கவிதைகளிலும் கவிதைமையைக் கெடாமல்
பார்த்துக்கொள்ளும் மொழி லாகவம் என முதல் தொகுப்பின் கவிதைகளே முத்திரைப்
பதிக்கின்றன. காதல், காமம், அன்பு, தத்துவம் என கவிதைப் பரப்பு
பரந்துகிடக்கின்றன. உணர்வுகளைத் தனித்துவக் கோணத்தில் நோக்கி அழகியல்
காட்சிப் படிமங்களோடு கட்டமைக்கிறார் கவிதைகளாக. கவிதை எல்லாக்
காலத்திலும் புதிதுதான். கவிதைகளின் மீது இவருக்கிருக்கும் காதல் இவரைக்
காப்பாற்றும்; நல்வழிப்படுத்தும்.
No product review yet. Be the first to review this product.